இஸ்ரேல் மீது ஹமாஸ் கூட்டுப்படை கடுமையான பதில் தாக்குதல்

0
349

காஸா பகுதியிலுள்ள 30 இற்கும் மேற்பட்ட இலக்குகள் மீது நேற்றிரவு (30) இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு வெற்றிகரமான முறையில் பதில் தாக்குதல் நடாத்தியுள்ளதாக ஹமாஸ் அமைப்பும், ஜிஹாத் அமைப்புக்களும் இணைந்து அறிவித்தல் விடுத்துள்ளது.

இதேவேளை ஹமாஸ் அமைப்பு மற்றும் அதன் ஏனைய சகோதரத்துவ அமைப்புகள் மேற்கொண்ட ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இரு தரப்புக்கும் இடையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலின் பின்னர் இடம்பெற்ற கடுமையான இராணுவ நடவடிக்கையாக இது பார்க்கப்படுவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here