ஓட்டமாவடியில் போதைப் பொருள் வியாபாரி கைது

0
574
????????????????

-எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்தில் வைத்து நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் நேற்று மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நாவலடி தாண்டியடி பகுதியில் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன் தலைமையிலான குழுவினர்களால் இரண்டாயிரம் மில்லி கிராம் கஞ்சா, இருபது போதை மாத்திரைகள் மற்றும் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை தொடர்பாக மூன்று குற்றங்கள் காணப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாகவும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிக போதைப் பாவனை இடம்பெற்று வருவதால் அதனை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோத போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனைகள் அதிகரித்து காணப்படுவதை தடுக்கும் வகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here