பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அசத்தல்.. புதிய உலக சாதனை. (இலங்கையின் சாதனை உடைக்கப்பட்டது)

0
450

ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் 4 -வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது..
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து ஆடத் தொடங்கியது.
இந்நிலையில் பாகிஸ்தான் சார்பில் முதலில் துடுப்பெடுத்தாடிய வீரரகளான பகர் ஸமான் மற்றும் இமாம் உல் ஹக் தமது அசத்தல் துடுப்பாட்டம் மூலம் உலக சாதனை படைத்துள்ளனர்.

ஆம் ஏற்கனவே முதல் விக்கட்டுக்கு பார்டனர்ஷிப் சாதனையாக இருந்த ஜெயசூரிய மற்றும் உப்புல் தரங்கவின் 286 ஓட்ட சாதனையை முறியடித்து 304 ஓட்டங்களை பெற்று புதிய கிரிக்கட் சாதனையை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் பகர் ஸமான் ஆட்டமிழக்காமல் இன்று 208* ஓட்டங்கள் எடுத்து உலகின் 7 ஆவது அதிகூடிய தனி நபர் ஓட்டத்தையும் பதிவு செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணி இப்போட்டியில் 50 ஓவர்களுக்கு 1 விக்கட் இழப்புக்கு 399 ஓட்டங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here