(கடந்து வந்த பாதை)மீராவோடை பாடசாலை காணி விடயத்தில் தேரர் தலையிடுவது சரியா.? உண்மையில் நடந்தது, என்ன.?

0
249

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

மட்டக்களப்பு கல்குடா மீராவோடை சக்தி வித்தியாலயத்திற்குரிய விளையாட்டு மைதான குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த(18- 07-2017) அன்று செவ்வாய்கிழமை காலை வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களால் கண்டன போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த போராட்டம் இடம் பெற்ற இடத்திற்கு திடீர் என வருகை தந்த மட்டக்களப்பு மங்களராமய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீராவோடையில் 10 நாட்களுக்குள், முஸ்லிம்களை அகற்றுவேன் அல்லது பத்து தினங்களுக்குள் மீராவோடை சக்தி வித்தியாலய மைதானத்திற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ள முஸ்லிம் குடியேற்றங்களை அகற்றித் தருவேன் என அம்பிட்டிய சுமனரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ள விடயமானது கல்குடா பிரதேசத்தில் மட்டுமல்லாமல் தேசியம் மற்றும் சர்வதேசம் பேசும் அளவிற்கு இன்று ஊடக மயப்படுத்தப்பட்டு வருகின்றது.

அது மட்டுமல்லாமல் ஒரே மொழியுடனும், இன ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் ஒற்றுமையினை சீர்குளைக்கின்ற விடயமாகவும், திட்டமிடப்பட்ட தேசிய அல்லது சர்வதேச அரசியல் பின்னணியாக கூட இருக்கலாம் என பலவாறு அரசியல் ரீதியாகவும், அமைப்புக்கள் ரீதியாக அறிக்க்கை விடப்படுகொண்டிருக்கின்றமை இன்னும் மக்கள் மத்தியில் தொடர்ந்தேர்சியான பேசு பொருளாக குறித்த விடயம் மாறியுள்ளது.

அதே போன்று மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி தெரிவித்த கருத்தான நாம் நமக்குள் முரண்பட்டுக் கொள்கின்ற போது, எங்களுக்கு நீதி சொல்ல காவியுடை தரித்த பேரினவாத பிக்குகள் களத்தில் வந்து நீதிபதியாக தரிசனம் கொடுப்பார்கள்.. போன்ற தூர நோக்கோடு சிந்திக்க தூண்டுகின்ற கருத்துக்களும் அரசியல் வாதிகளினால் விடப்பட்டவாறு இருப்பதையும் காண கூடியதாக இருக்கின்றது..

வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கபட்டு முஸ்லிம்களும், தமிழர்களும் தேங்காயும் பிட்டும் போல வாழ வேண்டும் என்ற கருத்துகள் ஓங்கி ஒலிக்கின்ற இந்த கால கட்டத்திலே குறித்த மீராவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதான காணியில் முஸ்லிம் தரப்பினர் அத்துமீறி குடியிருப்புக்களை அமைத்துள்ளமை தொடர்பாக குறித்த பிரதேசத்திற்கு சென்று நேரடியாக அத்துமீறி குடியேறியதாக கூறப்படும் முஸ்லிம் மக்களினுடைய கருத்துகளை கேட்டறிந்ததுடன் சமூக ஆர்வலறும் குறித்த தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என எதிர்பார்க்கும் சாட்டோ வை.எல். மன்சூரினதும் கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here