65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம்….!

0
978
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் ஹிங்குராகொட பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் குறித்த விமான நிலையம் தொடர்பில் மேலும் சில புதிய தகவல்களை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தொலை நோக்கு பார்வைக்கு அமைய 65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டில் புதிய விமான நிலையம் ஹிங்குராங்கொடயில் அமைக்கப்படவுள்ளது. சர்வதேச தரத்தில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ள நிலையில் புதிய விமான நிலையத்தின் ஓடுபாதை, வெளிச்ச ஏற்பாடுகள், முனையங்களின் கட்டுமானம் என்பவை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை ஓடுபாதையானது 2287 மீட்டர் நீளமும் 46 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. விமான நிலைய பகுதி இலங்கை விமானப் படையினரால் பராமரிக்கப்பட்டு வருவதோடு, பாதுகாப்பு தேவைகளுக்காகவும் பயன்பட்டு வருகின்றது என கூறியுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here