ஓட்டமாவடிக்கு பெருமை சேர்த்த முகம்மட் ஆதில்

0
500

ஓட்டமாவடி நிருபர் அ.ச.முகம்மது சதீக்

முகம்மட் சாதிக்கீன் முகம்மட் ஆதில் என்ற மாணவர் விளையாட்டுத்துறை விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ பட்டப்பாடநெறிக்காக பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.எமது கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது மாணவரும் ஓட்டமாவடி மண்ணின் முதலாவது மாணவரும் ஆவார்
இம்மாணவர் கடந்த 2017 ம் வருடம் க.பொ.த உயர்தர பரீட்சையில் வணிக பிரிவில் தோற்றி சித்தியடைந்தார்.
தற்காப்பு கலையின் மிகச்சிறந்த விருதுகளை மாகாண மட்டத்தில் பெற்றதின் காரணமாக இவருக்கு விளையாட்டுத்துறை விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்டள்ளார்
இவர் நெய்னா முகம்மட் சாதீக்கின் ஆசிரியர் முகம்மது கனி நுபைஸா ஆகியோரின் மூத்த புதல்வரும் ஆவார்.ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் கணித விஞ்ஞான பிரிவின் பகுதித்தலைவர் மு.க நவாஸ் ஆசிரியரின் மருமகனுமாவார்
கடந்த 2017 ம் ஆண்டு ஓட்டமாவடி மத்திய கல்லுர்ரியில் மைதானத்தில் கேட்போர் கூடத்திற்கான அத்திவாரம் மைதானத்தை பாதிக்காத வகையில் கட்டுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இவரும் ஒருவர். அதனை தொடர்ந்து இவர் வாழைச்சேனை பொலிஸ்நிலையம் வரை சென்றதோடு பாடசாலையிலும் பல இடர்பாடுகளுக்கு உள்ளானர் என்பதும் குறிப்பிடத்தக்கது .மற்றும் ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிலும் சிறப்பாக செயற்பட்டார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here