முந்திக்கொண்ட ஈரான், ஏமாற்றமடைந்த அமெரிக்கா!

0
378

ஈரான் நாட்டின் மீது அமெரிக்க அரசாங்கம் முன்வைத்த பொருளாதார தடைகள் அமுலுக்கு வருவதற்கு ஒருநாள் முன்னதாகவே ஐந்து புதிய விமானங்களை ஈரான் வாங்கியுள்ளது. அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து அண்மையில் விலகிக் கொண்ட அமெரிக்கா, ஈரான் நாட்டின் மீது அடுத்தடுத்து பொருளாதார தடைகளை விதித்து வருவதுடன் தனது நேச நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் கூட்டு நிறுவனமான ஏ.டி.ஆர். உடன் 72-600 ரக பயணிகள் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி ஏற்கனவே 8 விமானங்கள் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது அந்நாட்டின் உள்நாட்டு விமான போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந் நிலையில் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் நிலையில் அதற்கு முன்னதாக ஈரான் ஏற்கனே மேற்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஐரோப்பாவிடமிருந்து 5 ஏ.டி.ஆர். 72-600 ரக விமானங்களை வாங்கியுள்ளது.

மேற்படி இந்த ஐந்து பயணிகள் விமானங்களும் நேற்று ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here