ஆட்களப் பெயரும் மேல்மட்ட ஆட்களப் பெயரும்

0
16

இணையத்தளம் ஒன்றின் சீர்மை வள இடப்படுத்தியில் அமைந்துள்ள தனித்துவமான முகவரி ஆட்களப் பெயர் (Domain Name) எனப்படும். ஆட்களப் பெயரில் உள்ளதும், இறுதியில் குற்றுடன் இணைந்தாக முடிவடையும் சில பின் ஒட்டுக்கள் மேல்மட்ட ஆட்களப் பெயர் (Toplevel Domain Name) எனவும் அழைக்கப்படுகின்றது. ஆட்களப் பெயர் மற்றும் மேல்மட்ட ஆட்களப் பெயர் என்பவற்றை விளங்கிக் கொள்வதற்கு பின்வரும் உதாரணத்தை அவதானிக்கவும்.

•             இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் – http://www.doenets.lk

இங்கே ஆட்களப் பெயர் doenets.lk ஆகவும், மேல்மட்ட ஆட்களப் பெயராக .lk எனவும் குறிப்பிடப்படும்.

மேல்மட்ட ஆட்களப் பெயர்களாக பல்வேறு துறைகளுக்கு மற்றும் நாடுகளுக்கு ஏற்றவகையில் வித்தியாசமாவையாகக் காணப்படுகின்றன.

துறையின் அடிப்படையில் மேல்மட்ட இணையத்தளப் பெயர்கள்.

•             வர்த்தக நோக்க இணையத்தளம் – .com

•             வணிக நோக்க இணையத்தளம் – .biz

•             இலாப நோக்கற்ற இணையத்தளம் – .org

•             வலையமைப்பு இணையத்தளம் – .net

•             கல்வி நோக்க இணையத்தளம் –  .edu

•             தகவல் இணையத்தளம் – . .info

•             போக்குவரத்து இணையத்தளம் – .travel

•             அரச இணையத்தளம் – .gov

நாடுகளின் அடிப்படையில் மேல்மட்ட இணையத்தளப் பெயர்கள்.

•             இலங்கை – .lk

•             இந்தியா – .in

•             ஐக்கிய அமெரிக்கா – .us

•             ஐக்கிய இராட்சியம் – .uk

•             பங்களாதேஸ் – .bd

•             பிறேசில் – .br

•             கனடா – .ca

•             சீனா – .cn

•             கியுபா – ..cn

•             ஜேர்மனி – .de

•             எரிட்றியா – .er

•             பிரான்ஸ் – .fr

•             இஸ்ரேல் – .il

•             இத்தாலி – ..it

•             குவைத் – ..kw

•             நேபாளம் – .np

 

தொகுப்பு:- ச.அக்‌ஷயன், ஆசிரியர், இ/தேலை தமிழ் மகா வித்தியாலயம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here