298 பயணிகளை பலிவாங்கிய மலேசிய விமானம் தொடர்பில் வெளியாகியுள்ள பகீர் தகவல்!

0
628

298 பயணிகளை பலிவாங்கிய மலேசிய விமானம் தொடர்பில் ரஷ்ய அதிகாரிகள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் பயணமான MH17 என்ற மலேசிய விமானம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

உலகம் எங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில் ரஷ்யா ராணுவம் பயன்படுத்தும் ஏவுகணையே குறித்த பயணிகள் விமானம் தாக்கப்பட காரணமாக அமைந்தது எனவும் கண்டறிந்தனர்.

ஆனால் தற்போது குறித்த விவகாரம் தொடர்பில் பேசிய ரஷ்ய அதிகாரிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்த Buk ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் அம்பலமானது.

இந்த ஏவுகணை தயாரிப்பு கூடமானது மாஸ்கோவின் அருகே செயல்பட்டு வந்தது. ஆனால் 1986 ஆம் ஆண்டு குறித்த ஏவுகணை கூடத்தை உக்ரைன் நாட்டுக்கு அப்போதைய சோவித் அரசு கையளித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஆதலால் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் உக்ரைன் எனவும் தற்போது ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் Buk ஏவுகணை ஏதும் தற்போது ரஷ்யாவிடம் இல்லை எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here