ஜி.பி.எஸ் இல்லாமலேயே இருப்பிடத்தை கண்டறியும் தொழில்நுட்பம்!

0
30

இடத்தடங்காட்டி எனப்படும் ஜிபிஎஸ்(Global positioning system) வசதி இல்லாத பகுதிகளில் மனிதர்கள் மற்றும் ரோபோட்களின் இருப்பிடத்தை கண்டறியும் வகையிலான அல்காரிதம் ஒன்றை விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது. அக்குழுவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விஞ்ஞானி ஒருவரும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் கூறுகையில், மிகவும் சிக்கலான, தெரிந்திராத மற்றும் மிகவும் மோசமான கட்டமைப்புகளை கொண்ட சுற்றுப்புறத்திலிருந்து செயல்படும் ராணுவவீரர்களின் இருப்பிடத்தை கண்டறிவது மிகவும் அவசியம் என்கின்றனர்.

“காணாமல் போன வீரன்களை கண்டறிய உதவுவது என்பது மிகவும் முக்கியமான பணியாகும். மனித மற்றும் ரோபோட்டிக் வீரர்கள் குழுவாக இணைந்து பணியாற்றவும் இது மிகவும் அவசியம்” என்கிறார் அமெரிக்க இராணுவ ஆய்வக ஆராய்ச்சியாளர் கன்ஜன் வர்மா. “பொதுமக்கள் பயன்படுத்தும் ஜி.பி.எஸ் போன்ற பெரும்பாலான செயலிகள் மற்றும் தீர்வுகள், இதுபோன்ற சூழ்நிலைகளில் நன்றாக செயல்பட்டு நமக்கு உதவும். எடுத்துக்காட்டாக கார் மூலம் நாம் சென்றடைய வேண்டிய இடத்திற்கு தடங்காட்டும்”என்கிறார் வர்மா. ஆனாலும் இந்த தீர்வுகள் மற்றும் செயலிகள், இராணுவ சூழ்நிலைகளுக்கு சரிபட்டுவராது.

ஜி.பி.எஸ் இல்லாமலேயே இருப்பிடத்தை கண்டறியும் தொழில்நுட்பம்!“எடுத்துக்காட்டாக ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவையான கட்டமைப்புகளை(எ.கா: செயற்கைகோள்கள்) எதிரிகள் அழித்துவிட வாய்ப்புள்ளது. மற்றொருபுறம் சிக்கலான சுற்றுப்புறங்களில்(எ.கா : கட்டிடங்களின் உட்புறம்) ஜி.பி.எஸ் சிக்னல்கள் ஊடுருவி வருவதும் மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் சிக்கலான மற்றும் இரைச்சலான சுற்றுப்புறங்கள், ஒயர்லெஸ் சிக்னல்களின் பரவலுக்கு தடையாக இருக்கும்” என்கிறார்

ஆய்வகத்தில் பணியாற்றும் பிகாடு டஜிபூ. குறிப்பாக கட்டிடங்களுக்கு உட்புறம் உள்ள தடைகளின் அளவு, கம்பியில்லா சமிக்ஞைகளின்(wireless signals) அலைநீளத்தைவிட அதிகமாக இருக்கும் போது, சமிக்ஞைகளின் ஆற்றல் வலுவிழந்து திசைமாறுகிறது.

இதன் காரணமாக இருப்பிடம் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள கம்பியில்லா சமிக்ஞைகள் நம்பகத்தன்மையில்லாததாக இருக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கம்பியில்லா சமிக்ஞைகளின் ஆற்றலை பயன்படுத்தும் இடங்காட்டி செயல்முறைகள்/செயலிகள், தடைகள் அதிகமில்லாத வெளிப்புறங்களில் நன்கு செயல்படுகிறது.எனினும், தடைகள் அதிகமுள்ள பகுதிகளில் இதன் செயல்பாடு படுமோசமாக இருக்கிறது.

ஜி.பி.எஸ் இல்லாமலேயே இருப்பிடத்தை கண்டறியும் தொழில்நுட்பம்!எனவே இடங்காட்டிகளின் அடிப்படை தேவையான ரேடியோ சிக்னல்கள் வரும் திசையை தீர்மானிக்க(determining the direction of arrival -DoA) ஆராய்ச்சியாளர்கள் புதுமையான தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை என்னவெனில், பெறப்பட்ட இடஞ்சார்ந்த சமிக்ஞைகளின் வலிமையின் சாய்வு, மூல இடத்தைப் பற்றிய தகவல்களை சுமந்து வரும்.

 

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here