செவ்வாய் கிரக ஆய்வில் நாசா சாதனை.!

0
33

நாசா கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் தூரம் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு செவ்வாயில் இருக்கும் மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது ஆகும்.

மிகவும் முக்கியமாக கடந்த 5 ஆண்டுகளாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை செய்த கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது செவ்வாய் கிரகம் பற்றி முக்கியமான உண்மையை கண்டுபிடித்துள்ளது.
கியூரியாசிட்டி மாங்கனீசு ஆக்ஸைடு கண்டுபிடிப்புடன் துவங்கியது.

இது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய இரசாயன கலவைகள் ஆகும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழே இருக்கும் உப்பு நீர், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உருவான நுண்ணுயிரியல் வாழ்க்கைக்கு உதவுவதற்கு போதுமான ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here