உலக வரலாற்றுப் பதிவுகளுக்கமைய  நவம்பர் 20ஆம் திகதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்று

0
14

உலக வரலாற்றுப் பதிவுகளுக்கமைய
நவம்பர் 20ஆம் திகதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக…

ரஷ்யாவின் தலைசிறந்த நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் ( Leo Tolstoy) 1910ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி Ryazan பிராந்தியத்தில் Astapovo எனும்
ரயில் நிலையத்தில் நியூமோனியா நோய் கண்டு காலமானது பதிவாகியுள்ளது!

1828ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி ரஷ்யாவில் Yasnaya Polyana எனுமிடத்தில் செல்வாக்கான பிரபுக்கள் பரம்பரையில் பிறந்த அவரது இயற்பெயர்
Lev Nikolayevich Tolstoy என்பதாகும்!
இளமையில் நெறிதவறிய வாழ்க்கை நடத்திய பின்னர் படையில் சேர்ந்து
பணியாற்றி ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடு திரும்பி
உழவர்களின் குழந்தைகள் பயில்வதற்காக
ஒரு பாடசாலை தொடங்கியதோடு சமுதாயச்
சீர்திருத்தப் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்!

ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பையும்,
நாவலையும் வெளியிட்டுத் திறமையான
எழுத்தாளர் எனப் பேர் பெற்றிருந்த அவர்
War and Peace (1865-69), Anna Karenina (1875-77), The Death of Ivan Ilyitch(1886),
What is Art(1898) முதலான சாகாவரம் பெற்ற
நாவல்கள் பலவற்றைப் படைத்தார் ! ரஷ்யப்
புரட்சியின் முன்னோடி என லெனின் இவரை வர்ணித்திருக்கிறார்!

தனது மாபெரும் பண்ணையில் இவர் ஒரு
கூலித்தொழிலாளி போல் வாழ்ந்தார்; முழுமையான துறவறத்தைப் பின்பற்றினார்!
திருமணவாழ்வில் இவருக்கு ஏற்பட்ட
கசப்புணர்வு தாங்கமுடியாத எல்லைக்குச்
சென்றதால், திடீரென்று Astapovo ரயில் நிலையம் நோக்கிச்சென்றார்! பயங்கரமான
குளிர் காரணமாக, நியூமோனியா நோய் கண்டு உயிரிழந்தார் என்று வரலாறு கூறுகிறது!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here