ரிதிததென்ன பாடசாலை சாதனை

0
17

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமான ரிதிதென்னயில் அமைந்துள்ள இக்ரஹ் வித்தியாலயத்தில் இம்முறை வெளியான க.பொ.த. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் அப் பாடசாலைபிரதேசத்தில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய 7 மாணவர்களில் 3 பேர் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகியுள்ளதுடன் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து நூறு வீதம் சித்தியை அப்பாடசாலை பெற்று பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மீள் குடியேற்றக் கிராமமான ரிதிதென்னயில் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்ரஹ் வித்தியாலயமானது அதி கஷ்டப் பாடசாலை என்ற வரையறைக்குள் அடங்கும் ஒரு பாடசாலையாகும். மட்டக்களப்பு மத்தி வலயத்தில் அமைந்துள்ள இப்பாடசாலை வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து மிகத் தொலைவில் அமைந்துள்ள ஒன்றாகும். இப்பாடசாலையில் கற்பிக்கும் சகல ஆசிரியர்களும் குறைந்த பட்சம் சுமார் 25 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பாலிருந்து வருகை தருபவர்களாகும். ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி போன்ற பிரதேசத்திலிருந்து வருகை தரும் ஆசிரியர்களே கற்பிக்கும் இப்பாடசாலையின் மாணவர்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகும்.

இத்தகைய நிலையிலுள்ள இப்பாடசாலையில் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களே 100 வீதம் சித்தியையும் மூன்று பல்கலைக் கழக அனுமதியையும் பெற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

பாத்திமா சபானா, பாத்திமா ரிபாஸா, பாத்திமா சஸ்னா, பாத்திமா அகீலா, முகம்மது ரியாஸ், முகம்மது ரிபாஸ் சித்தியடைந்த மாணவர்களாகும் இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான

இஸ்லாம் பாட ஆசிரியர்; பஸால் முகம்மது, தமிழ்பாட ஆசிரியர் எம்.ஐ. ஷாஜஹான், புவியியல்பாட ஆசிரியர் எம்.பி.எஸ்.ஹாஜரா ஆகியோருக்கு இச்சந்தர்ப்பத்தில் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக வித்தியாலய அதிபர் என்.எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here