இலங்கை யூணாணி மருத்துவத்துறைக்கு உயிரூட்டிய பெருத்தலைவர் அல்ஹாஜ் மர்ஹூம் ஸேர் ராஸிக் பரீத்

0
9
#நாளைய தேசம்

ஆயுர்வேத,சித்த மற்றும் யூணாணி மருத்துறைகளை உள்ளடக்கியதாக 1929ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே இலங்கை சுதேசி மருத்துவக்கல்லூரி ஆகும்.இக்கல்லூரியின் வளர்ச்சி மற்றும் இதர அபிவிருத்தி நடவடிக்கைக் சம்பந்தமாக ஆராய்வதற்காக 1946ம் ஆண்டு அன்றைய ஆளுநரால் ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அவ்வாணைக்குழு தமது அறிக்கையில் சுதேசிய மருத்துவக்கல்லூரியில் இயங்கும் யூணாணி மருத்துவப் பிரிவை முடிவிடும்படியும் எந்த மாணவராவது அத்துறையில் தொடரவிரும்பின் அவர்களுக்கு இந்தியா சென்று கற்பதற்கு அனுமதிக்கும்படியும் பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரை அன்றைய செண்ட் சபையில் சபிக்கப்பட்டபோது பெருந்தலைவர் அல்ஹாஜ் மர்ஹூம் சேர் ராஸிக் பரீத் அவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு யூணாணி மருத்துவத்தின் தேவைப்பாட்டை சபைக்கு தெளிவுபடுத்தினார்கள். இவரது எதிர்ப்பை ஏற்ற சபை 1947ம் ஆண்டு ஜனவரி 22ம் திகதி யூணாணி மருத்துவப்பிரிவு தொடர்ந்து இயங்க அனுமதி அளித்ததோடு அதன் வளர்ச்சிக்கான திட்டங்களையும் ஏற்பாடுத்தியது. அன்றைய பெரும் தலைவரின் போராட்டத்தால் உயிர்பெற்றெழுந்த யூணாணி மருத்துவத்துறை இன்றுவரை நிலைத்து சேவையாற்றிக் கொண்டிருக்கிறது.
அல்லாஹ் அப்பெருந் தலைவரை ஏற்றுக்கொள்வானாக.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here