இனிப்பு மிகுந்த பானங்களை அருந்துவதால் வருடம் தோறும் 184,000 பேர் மரணம்!.

0
10

மிகுந்த இனிப்புச் சுவை கொண்ட பானங்களால் வருடம் தோறும் 184,000 பேர் வரையிலானவர்கள் மரணிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட் இவ் ஆய்வில் போதியளவு ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ் ஆய்விற்காக 1980 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 600,000 பேர் வரையானவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட டயட் தொடர்பான ஆய்வுகளில் 62 சதவீதமான ஆய்வு தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இவ் ஆய்வின்போது 187 நாடுகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

2010 ஆண்டில் மட்டும் 184,000 பேர் மரணம் அடைந்துள்ளதுடன் இவர்களில் 133,000 பேர் நீரிழிவு நோயினாலும், 45,000 பேர் இருதய நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here