வட்ஸ்அப் செயலியில் புதிய திருப்பம்…!

0
24
வட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களை இனி ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வட் செய்ய முடியும்.
வட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஐந்து பேருக்கு மட்டும் ஃபார்வட் செய்யக் கூடியதாக கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் குறுந்தகவல்களை ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மட்டுமே அனுப்பவோ அல்லது ஃபார்வட் செய்யவோ முடியும். இந்த கட்டுப்பாடு இந்தியாவில் மட்டும் அமுலாகி இருந்த நிலையில், தற்சமயம் உலகம் முழுக்க நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் உலகம் முழுக்க வட்ஸ்அப் பயன்படுத்துவோர் இனி ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு அதிகமாக குறுந்தகவல்களை அனுப்பவோ அல்லது ஃபார்வட் செய்யவோ முடியாது. இந்த கட்டுப்பாடை அமுல்படுத்துவது பற்றி ஆறு மாதங்களாக பயனர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாக வட்ஸ்அப் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வட்ஸ்அப் செயலியில் ஃபார்வட் செய்யப்படும் குறுந்தகவல்களை சுட்டிக்காட்டும் வகையில் ஃபார்வட் லேபல் குறுந்தகவல்களில் இடம்பெற்றது. இதன் மூலம் வட்ஸ்அப் செயலியில் ஃபார்வட் செய்யப்படும் குறுந்தகவல்களில் அவை ஃபார்வட் செய்யப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும்.
இவ்வாறு செய்வதால் பயனர்களுக்கு வரும் குறுந்தகவல் அனுப்புவோர் பதிவு செய்ததா அல்லது மற்றவர் அனுப்பியதை ஃபார்வட் செய்திருக்கிறாரா என்பதை மிக எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.
இன்று முதல் வட்ஸ்அப் செயலியின் புதிய அம்சங்களில் பயனர்களால் ஒரே சமயத்தில் அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே குறுந்தகவல்களை ஃபார்வட் செய்ய முடியும். தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவற்றை செயல்படுத்துவது பற்றிய பணிகள் நடைபெறும் என வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here