15 லட்சம் ரூபா பெறுமதியான மரம் கைப்பற்றப்பட்டது..

0
49

சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான மரங்களை கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலை காட்டுப்பகுதியில் வியாபாரத்திற்கு கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்கள் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

எட்டு அடி தொடக்கம் பத்து அடிகளைக் கொண்ட இருபத்தி நான்கு (24) பாலை மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவற்றின் பெறுமதி பதினைந்து இலட்சம் ரூபா வரை பெறுமதியானது என்றும் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மண் மற்றும் மரங்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில் இதனை முற்றா ஒழிக்கும் வகையில் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here