ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் I. T. அஸ்மி அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளி முகம்மது அலிக்கு மகத்தான வரவேற்பு

0
13

நாட்டின் நல்லிணக்கத்தையும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையினையும் வலியுறுத்தி சக்கர நாட்காலி துவிச்சக்கர வண்டியில் இலங்கை முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முகம்மது அலி அவர்களை ஊக்கப்படுத்தி வரவேற்கும் நிகழ்வு ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் I. T. அஸ்மி அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்று கூடிய கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச ஓட்டமாவடி பிரதேச சபை வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றதுடன் தங்களது அன்பு கலந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மக்கள் மாற்றுத்திறனாளி முகம்மது அலிக்கு வழங்கி கௌரவித்தனர்.

எமது பிரதேச சபை தவிசாளர் I. T. அஸ்மி அவர்கள் முகம்மது அலிக்கு பொன்னாடை போர்த்தி எமது பிரதேச சார்பான கௌரவத்தை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செயலாளர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், ஆட்டோ சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகளும் கலந்து இவ்வரவேற்பு நிகழ்வை சிறப்பித்தனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here