தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி

0
16
SLIIT BUSINESS SCHOOL அகில இலங்கை ரீதியாக நடாத்திய “Biz quiz SOFT SKILLS + 2019” போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டதாக பாடசாலை அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் தெரிவித்தார்.
கடந்த 06.03.2019 (புதன்கிழமை) குருநாகலில் நடைபெற்ற முதலாவது சுற்றில் நாடளாவிய ரீதியில் 115 பாடசாலைகளை பிரதிநிதித்துவப் படுத்தி 203 அணிகள் பங்குபற்றின.
இச்சுற்றில் 45 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியதோடு இதில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தினைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு தெரிவாகினர்.
இறுதிப் போட்டி செவ்வாய்கிழமை  கொழும்பு மாலபேயில் உள்ள SLIIT COLLEGE இல் நடைபெற்றது.
இப்போட்டி இரண்டு சுற்றுக்களாக நடைபெற்றதோடு முதலாவது சுற்றிலிருந்து 45 அணிகளில் 05 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியது.
இறுதிச் சுற்றில்  காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் மிகவும் திறமையாக போட்டியிட்டு அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினையும், மாவட்ட ரீதியில் முதல் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
தேசிய ரீதியில் முதலாம் இடத்தை கொழும்பு ஆனந்தா கல்லூரி பெற்றுக் கொண்டது.
மாவட்ட ரீதியில் முதல் ஐந்து இடத்திற்குள் வந்த ஒரேயொரு பாடசாலை காத்தான்குடி மத்திய கல்லூரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய ரீதியில் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக பாடசாலை அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் மேலும் தெரிவித்தார்.
_ந.குகதர்சன்_

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here