ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் சுற்றாடல்சார் செயற்பாடுகள் விருத்தி

0
10

கல்வி அமைச்சின் சுற்றாடல்சார் செயற்பாடுகள் பாடத்திட்டத்திற்கு அமைய பாடசாலைகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தில வலய கல்வி அலுவலக பிரிவில் உள்ள ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் தரம் மூன்று, நான்கு மற்றும் ஐந்து வகுப்புக்களைச்சேர்ந்த மாணவர்களது சுற்றாடல்சார் செயற்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கில்’ மாணவர் சந்தை இன்று (வியாழக்கிழமை) 14.03.2019 வித்தியாலய முன்றலில் இடம் பெற்றது.

வித்தியாலய அதிபர் எம்.எல்.எம்.பைசல் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி கோட்ட கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான் கலந்து கொண்டதுடன் அதிதிகலாக மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலகத்தின் பிரதி கல்வி பணிப்பாளர்கலான வீ.ரீ.அஸ்மீர் மற்றும் திருமதி ஆர்.றிஸ்மியா பானு ஆகியோர் கலந்து கொண்டதுடன் அதிகமான பெற்றோர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here