கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கு வகுப்புத் தடை !!

0
23

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் 15 பேருக்கு இரு வார வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழக நிர்வாகம் இதனை அறிவித்துள்ளது.

வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் மருத்துவ பீடத்தின் கனிஷ்ட மாணவர்களை மிக மோசமான பகிடிவதைக்கு உட்படுத்தியது விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான பகிடிவதைகள் இனவாத திசை திருப்பமாக அமைந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் இவ்வாறான பகிடிவதைகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்குவது சிறந்தது என சமூக ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஈவிரக்கமற்ற அநாகரிக பகிடிவதை புரிந்த மாணவர்களுக்கெதிராக பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்த வகுப்புத் தடையை வரவேற்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here