கற்றாழையின் பயன்கள்

0
15

கற்றாழையின் தோலை சீவி உள் இருக்கும் சோற்றை 7 முறை தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ள வேணும். கற்றாழை சோற்றில் Aloin என்ற வேதிப்பொருள் இருப்பதால், கழுவாது சாப்பிடும் பொழுது வயிற்றுப்போக்கு ஏற்படும். கற்றாளை சோற்றை உள்ளுக்கு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டி வர வீக்கம் தீரும். சோற்றை நன்றாக மிக்சியில் அரைத்து முகத்தில் பூசி வரலாம்.முகம் பளபளப்பாக மாறி விடும். இளம் பெண்களுக்கு ஏற்படும் மாத விலக்கு தொடர்பான நோய்களுக்கு, சோற்றை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து, கரண்டியளவு சாப்பிட தீரும்.

குமரி எண்ணெய் தலைக்கு தேய்த்து வர முடி நன்றாக கருமையாக வளரும். தூக்கம் சிறப்பாக வரும். கற்றாழையைக் கீறும் போது வடியும் பாலினை காயவைத்து கிடைக்கும் பொருளுக்கு மூசாம்பரம் என்று பெயர். இதனை ரத்த கட்டிற்கு நீரில் அரைத்து பற்று போட தீரும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து,
அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும். காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம் சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும் உடல் பருக்காமலே, பலகீனம் மறையும், தாது விருத்தி ஏற்படும். பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்.

சோற்றுக்கற்றாழை வெள்ளைப்பூண்டு பனங்கற்கண்டு எள் எண்ணெய்
ஆகியவற்றை கலந்து தோராயமான அளவுகளில் காய்ச்சி வடித்து எண்ணெயை குடல்; வயிறு தொடர்பான எல்லா நோய்களையும் குணப்படுத்தும். கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல்காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக்
கற்றாழை உள்ள நுங்கு (சோறு) போன்ற சதையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமானஅளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.

வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும் படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடிகண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக் கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்தநிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.

சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்தது போல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும் முன் கற்றாழையின் நுங்கு போன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.

நன்றி Abm Jawfar …CNTV


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here