மீராவோடை அல் ஹிதாயா மாணவி என்.நிஹ்மா ஒலிம்பியாட் தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவு

0
12

எம்.ஐ.லெப்பைத்தம்பி

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட  மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவி என்.நிஹ்மா தரம் 7, 8 மாணவ, மாணவிகளுக்கிடையில் இடம்பெற்ற கணித ஒலிம்பியாட் மாகாண மட்டப்போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஓட்டமாவடி தேசிய பாடசாலை ஆசிரியர் எம்.எம்.நவாஸ், மீராவோடை அமீர் அலி வித்தியாலய  ஆசிரியை றஸ்லியா நவாஸ் ஆகியோரின் புதல்வியாவார்.

மாகாண மட்டப்போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகி வலயம் மற்றும் கோட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்த மாணவி என்.நிஹ்மாவுக்கும் இவரை வழி நடாத்திய  இவரது  தந்தை எம்.எம்.நவாஸ் ஆசிரியருக்கும் மற்றும் எம்.சலாஹுதீன் ஆசிரியர், பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியர் சனூஸ் ஆகியோருக்கும் பாடசாலையின் அதிபர் முஹம்மது முபீன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு, தேசிய மட்டப்போட்டியிலும் வெற்றி பெற்று மாகாணத்திற்கும் வலய, கோட்டத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here