சீனாவில் காட்டுத் தீ; 30 தீயணைப்பு வீரர்கள் பலி

0
26

சீனாவின் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட  தீயை அணைக்க சென்ற 30 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லியாங்ஷான் யி பகுதியில் உள்ள 4,800 மீட்டர் உயரம் கொண்ட மலை பகுதியின் உள்ளடங்கிய வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக தீயை அணைப்பதற்காக 689 பேரை தீயணைக்கும் பணிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் குறித்த தீ அணைப்பில் ஈடுபட்டிருந்தவர்களில் 30  பேர் வரை காட்டு தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here