வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையினை பாசிக்குடா உல்லாச விடுதியினரினால் சுத்தம் செய்யும் வேலைத் திட்டம்

0
8

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளை பாசிக்குடா அமத்திஸ் றிசோட் உல்லாச விடுதியினரினால் சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் நடைபெற்றது.

பாசிக்குடா அமத்திஸ் றிசோட் உல்லாச விடுதியின் முகாமையாளர் எஸ்.றொசாந்தின் வழிகாட்டலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வைத்தியசாலையை சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஆண்கள் மற்றும் பெண்கள் நோயாளர் விடுதிகளின் காணப்படும் குறைபாடுகளை உல்லாச விடுதியில் பணி புரியும் ஊழியர்கள் கொண்டு பல்வேறு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு மீள் புனரமைப்பு செய்து கொடுக்கப்பட்டது.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இனிவரும் காலங்களில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பாதிப்படைந்து காணப்படும் விடுதிகள் புனரமைத்துக் கொடுக்க பாசிக்குடாவிலுள்ள அனைத்து சுற்றுலா உல்லாவிடுதியினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பாசிக்குடா அமத்திஸ் றிசோட் உல்லாச விடுதியின் முகாமையாளர் எஸ்.றொசாந்த் தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here