ஓட்டமாவடியில் – காணி பிணக்குகளுக்கு தீர்வுகான நடமாடும் சேவை

0
9

ஓட்டமாவடியில் காணி பிணக்கு தீர்வுகான நடமாடும் சேவை

எம்.ரீ.எம்.பாரிஸ்

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் நல விஷேட வேலைத்திட்டத்ததிற்கமைவாக ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராமங்களில் மிக நீன்ட காலமாக காணி தொடர்பான பிணக்குகளை எதிர்கொண்டு வருகின்ற பொது மக்களுக்கான காணி தொடர்பான விளக்கங்களையும் அது தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்கும் நடமாடும் சேவை ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் அன்மையில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் நடமாடும் சேவையில் காணி உரித்து இல்லாதவர்களுக்களுக்கு உரித்துரிமையை வழங்குதல் அதற்கு விண்ணப்பித்தல், காணி தொடர்பில் எழும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அங்கு தீர்வுகள் பெற்றுக் கொடுப்பதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது.

இதன்போது அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டதுடன் நூற்றுக்கணக்கான பயனாளிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here