கல்குடா கிராமத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதார்தை முன்னேற்றும் நோக்கில் மீன் பிடி வள்ளங்களும் மீன்பிடி உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு

0
9

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றினைவோம்” செயற்திட்டம் திங்கட்கிழமை முதல் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்தவகையில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கல்குடா கிராமத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதார்தை முன்னேற்றும் நோக்கில் மீன் பிடி வள்ளங்களும் மீன்பிடி உபகரணங்களும் வழங்கும் நிகழ்வும் பாசிக்குடா கடற்கரையில் நேற்று (11.04.2019) வியாழக்கிழமை இடம் பெற்றது.

கல்குடா கிராம சேவை உத்தியோகத்தர் கே.கிருஸ்ணகாந் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், உதவி திட்டப்பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, வேல்விசன் நிறுவனத்தின் கிழக்கு வலய முகாமையாளர் ஏ.ரமேஸ், கோறளைப்பற்று திட்ட முகாமையாளர் ஏ.ரணில், வாழைச்சேனை மீன்பிடி பரிசோதகர் எம்.எல்.எம்.முஜீஸ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகிர்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேல்விசன் அனுசரனையில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் பதினைந்து இலட்சம் ரூபா நிதியில் பத்து வள்ளங்களும், பதின்மூன்று பேருக்கு மீன்பிடி வலையும் ஒருவருக்கு மீன் விற்பனை உபகரணங்களுமாக இருபத்திநாலு பேருக்கு பொருட்கள் கையளிக்கப்பட்டதுடன் தொழில் முயற்சி தொடர்பான பயிட்சியை முடித்த இருபத்திநாலு பேருக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here