“சிறுவர்களை காப்போம்”என்ற தேசிய எண்ணக்கருவிற்கு அமைவாக “எதிர்காலத்தை வெற்றிகொள்ளும் பிள்ளைகள்” ஆளுமை விருத்தி செயலமர்வு

0
6
எதிர்காலத்தை வெற்றிகொள்ளும் பிள்ளைகள்  ஆளுமை விருத்தி செயலமர்வு
(எம்.ரீ.எம்.பாாிஸ்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் “நாட்டிற்காக ஒன்றினைவோம்” என்ற தேசிய திட்டத்திற்கு  அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன அதனடிப்படையில் “சிறுவர்களை காப்போம்” என்ற தேசிய எண்ணக்கருவிற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் “எதிர்காலத்தை வெற்றிகொள்ளும் பிள்ளைகள்” என்ற தொனிப்பொருளில் ஆளுமை விருத்தி செயலமர்வு ஒன்று நேற்று 11 மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
சிறுவர்களை போதைப்பொருள் பாவனைகளில் இருந்து காப்பாற்றுதல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எதிர்காலத்தை இலகுவாக்கி கொள்ளுதல் சிறுவர்களின் தேவைகளை அறிந்து அவற்றை வழங்குதல் உள ரீதியாக சிறுவர்களை பாதுகாத்தல் போன்ற பல விடயங்கள் சம்பந்தமாக இங்கு விரிவுரைகள் வழங்கப்பட்டன
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினர்களான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் சீனித்தம்பி யோகேஸ்வரன் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம் மன்சூர் ஜனாதிபதி செயலக உதவிப்பணிப்பாளர் அருணிலி சோமரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர் மேலும் பாடசாலை அதிபர்கள் வலயக்கல்வி அலுவலர்கள் சிறுவர் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here