சுயதொழில் கடன் வழங்கும் திட்டம்

0
9

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றினைவோம்” செயற்திட்டம் திங்கட்கிழமை முதல் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்தவகையில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் கிராமிய வங்கிகளினூடாக சுயதொழில் கடன் வழங்கும் திட்டம் வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் வே.ஜீவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக கூட்டுறவு சங்க தலைமைக் காரியாலய உத்தியோகத்தர்களான் எஸ்.எல்.ஏ.காதர், ஐ.ஜிப்ரி, எஸ்.மகேஸ்வரன், வலயக் கூட்டுறவுப் பொறுப்பாளர் ஏ.எல்.எம்.பாறூக், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.மங்களன், எஸ்எம்ஏ.ஹாதி, என்.டீ.எம்.ஜாக்கீர் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளை மத்தி, கிரான், ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், பொது முகாமையாளர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், பதிவாளருமாகிய எம்.சீ.எம்.சரீப் வழிகாட்டலில், மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல், திணைக்கள உத்தியோகத்தர்களினதும் ஒழுங்கமைப்பில் கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளை மத்தி, கோறளைப்பற்று தெற்கு கிரான், மற்றும் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் கிராமிய வங்கிகளினூடாக கிராம சக்தி பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த நூறு பேருக்கு சுயதொழில் கடன் வழங்கி வைக்கப்பட்டது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here