நாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டத்தில் வீதி துப்பரவு

0
5

எஸ்.எம்.எம்.முர்ஷித்.

ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றினைவோம்” செயற்திட்டம் திங்கட்கிழமை முதல் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச சபை, வாழைச்சேனை பிரதேச சபை மற்றும் வாகரை பிரதேச சபை இணைந்து நாவலடி பிரதான வீதி தொடக்கம் புணாணை வரை துப்பரவு செய்யும் வேலைத் திட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி.தட்சாயினி யசோகாந் உட்பட சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது நாவலடி பிரதான வீதி தொடக்கம் புணாணை வரை வீதியோரங்களில் காணப்படும் குப்பைகளை பிரதேச சபையின் சுத்திகரிப்பு உத்தியோகத்தர்கள் மூலம் அகற்றப்பட்டது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here