பிரதேச சபை உறுப்பினர் பாயிஸா நெளபல் பதவியை இராஜினாமா ?

0
114
எம்.ரீ.எம்.பாரிஸ்

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பட்டியல் உறுப்பினர் திருமதி பாயிஷா நெளபல் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து திடீர் இராஜினாமா செய்யப்போவதாக தகவல்.

அவர் தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் ஊடகங்களுக்கு வெளியிடவில்லை நம்பகத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் கருத்துக்களின் அடிப்படையில் கட்சியின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த பிரதேச சபைத் தேர்தலில் மீராவோடை மேற்கு,கிழக்கு ஆகிய வட்டாரங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பிலான ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களான முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ் ஹமீட் ,ஐக்கிய தேசியக் கட்சி கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எல்.ரீ.எம். புர்கான் ஆகியோர் தோல்வியடைந்த நிலையில்
மீராவோடை வட்டாரத்தை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில்
பட்டியல் வேட்பாளரான பாயிஷா நெளபல் அவர்களை
குறித்த கட்சி பிரதேச சபை உறுப்பினராக நியமித்திருந்தது.

இவருடைய பதவி நீக்கம் அல்லது இராஜினாமா ஆனது அவரின் பிரதேச சபை உறுப்பினர் காலம் ஒரு வருடம் பூர்த்தியாகிய நிலையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர் பிரதேச சபை உறுப்பினராக பதவி நீக்கப்பட்டால் அல்லது இராஜினாமா செய்தால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மீராவோடை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எந்த ஒரு பிரதேச சபை உறுப்பினரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பிரதேச சபை உறுப்பினர் பாயிஷா நெளபல் அவர்கள் எமது பிரதேசத்தில் சூடுபிடித்துள்ள மீராவோடை வாராந்த சந்தை நிறுத்தப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு எதிராக அச்சந்தை நிறுத்தப்படக் கூடாது அது ஏழை மக்களின் சந்தை அவர்களின் வாழ்க்கைக்கு பாரிய அளவில் உதவி வருவதாகவும் தமது கருத்துக்களை சபையிலும் ஏனைய பொது நிகழ்வுகளிலும் தனது பிரதேச மக்கள் சார் உரிமைக்காக குரல் கொடுத்து வந்தவர் ,மேலும் மீராவோடை பொது நூலகம்,வைத்தியசாலை,தபாலகம் தரமுயர்த்தப்படல்,பிரதேச வடிகான் சுத்தம் செய்யப்படல்,பெண்களின் வாழ்வாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களை சபையில் முன்வைத்து நடவடிக்கை எடுக்கக்கோரியமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கட்சியின் ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் ஜெஸ்மின் வீவி அவர்களும் கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் இராஜினாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களின் பிரதேச சபை உறுப்பினர் பதவி சுழற்சி முறை அடிப்படையில் பட்டியலில் போட்டியிட்ட ஏனைய பெண் வேட்பாளர்களுக்கு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here