தென்கிழக்கு தவறிய தலைமை.

0
871

தென்கிழக்கு தவறிய தலைமை.

#Alif Sabri

தலைவரின் மரணத்தின் பின், 2001 ஜூனில் 11 எம். பி. களுடன் அமைச்சுப் பதவியில் இருந்த ஹக்கீம் சார்பு முஸ்லிம் காங்கிரஸ் 4 பேர்களைத் தவிர ஏனையோர் எதிர்கட்சிக்கு மாறினர். சுமார் 6 மாதங்களின் பின் PA யிடம் இருந்து UNP க்கு ஆட்சி மாறியது. 2001.12.05, ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார், ஹக்கீம் சார்பு மு. கா. அரசுடன் இணைந்தது.

2004.04.02 எதிர்பாராத ஒரு பாராளுமன்ற தேர்தல். 5 வருட UNP யின் ஆட்சியில் ஹக்கீம் சார்பு SLMC 2.5 வருடத்தை பதவியற்று எதிர்க்கட்சியில் இருந்தது. இக்கால கட்டத்தில், 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆகின்றார். பல அழுத்தங்களின் பின்னர் ஹக்கீம் சார்பு SLMC யின் 6 MP க்களும் மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் இணைகின்றனர். ஆனால், 11 மாதங்களின் பின்னர் மீண்டும் எதிர்க்கட்சிக்கு வருகின்றனர். 2007 நவம்பர் மாதத்தில் ஹக்கீம் சார்பு 6 SLMC MP க்களும் அரசை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, 2010 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் UNP சார் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றனர். பின்னர், 2010 ஏப்ரல் பொதுத்தேர்தலில் UNP அணியில் 8 ஆசனங்களைப் பெறுகின்றனர்.

தேர்தல் முடிவின் பின்னர், 2010 ஆகஸ்ட், ஹக்கீம் சார்பு SLMC மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் இணைகின்றனர். 2014 டிசம்பர் வரை நீதி அமைச்சராக இருந்த ஹக்கீம் அணி அரசை விட்டு வெளியேறியது. 2015.01.08 UNP சார்பு மைத்திரி அரசுடன் SLMC இணைந்து ஹக்கீம் அமைசாராகின்றார். அதன் பின்னர் நடைபெற்ற 2015.08.17 பொதுத்தேர்தலில் UNP சார்பில் 7 MP க்களை பெற்று ஹக்கீம் அமைச்சை தக்கவைத்துக்கொண்டார்.

சுமார் 20 வருட உணர்ச்சியூட்டும் அரசியலில் தென்கிழக்கு சமூகம் கண்ட பலன் என்ன? மாறிமாறி எதிர்க்கட்சியில் தேர்தல் கேட்பதும், ஆளும் கட்சியில் அபிவிருத்தி என்று அடிமையாக இருப்பதும் இன்னும் தொடரத்தான் வேண்டுமா? இன்னும் எத்தனைக்காலம் இந்த போலி நாடகத்தை அங்கீகரிக்கப் போகின்றீர்கள்? அரசியல் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்த எம் தலைவன் அஷ்ரப் கண்ட தென்கிழக்கில் ஒரு ஆளுமை உள்ளவன் இல்லையா உங்கள் தென்கிழக்கை அபிவிருத்திசெய்ய?


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here