கல்முனை விவகாரம் தொடர்பில் ரிசாட்டினை தனது குழுவுடன் சந்தித்து நன்றி கூறிய ஹரிசும்….அதிரடி மாற்றத்தினை நோக்கிய பயணத்தில் அம்பாறை அரசியலும்

0
7

கல்முனை விவகாரம் தொடர்பில் ரிசாட்டினை தனது குழுவுடன் சந்தித்து நன்றி கூறிய ஹரிசும்….அதிரடி மாற்றத்தினை நோக்கிய பயணத்தில் அம்பாறை அரசியலும்….Kuttiyan Ahmed Irshad
********************************
கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளோடு கொழும்பில் அமைச்சரை சந்தித்து தங்களது நன்றி தெரிவித்துள்ளார்.

மறுபக்கத்திலே, குறித்த சந்திப்பினை உதராணமாக வைத்து முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது அமைச்சு பொறுப்பினை எடுத்திருந்த சந்தர்ப்பத்தில் ஹரிஸ் கல்முனை விவகாரம் தீர்க்கப்படாத வரைக்கும் அமைச்சினை பொறுப்பெடுக்க மாட்டேன் என தனது பிரதேச மக்களுக்காக தியாக உணர்வுடன் செயற்பட்ட விடயம அரசியலில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக அரசியல் அவதானிகளின் கருத்துக்கள் அமைந்துள்ளது.

இது ஹரிசுடைய தனிப்பட்ட அரசியலிலும் மட்டுமல்லாது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்றிருந்த 33000 வாக்குகள் எனும் சாதனையினை இரண்டு மடங்கிற்கு மேலதீகமாக வரப்போகின்ற தேர்தல்களில் பெற்று அதிரடி மாற்றத்தினை நோக்கிய பயணத்தில் கல்முனை சம்மாந்துரறை, பொத்துவில், அக்கறைபற்று போன்ற பிரதேசங்களில் மறுமளர்ச்சியுடன் சாதனை படைக்க போகின்றது என்ற கருத்துக்களும், தமது எதிர்கால அரசியல் நிலவரம் எவ்வாறு அமைய போகின்ரது என்பது சம்பந்தமான சிந்தனைகளும் மக்கள் மத்தியில் பெருமளவில் அலசப்படும் விடயமாக மாறியுள்ளது.

இந்த நிலையிலே முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும், பெரும் தலைவர் அஸ்ரஃபின் பாசறையில் வளர்க்கப்பட்டவரும், கல்முனை தொகுதியின் அரசியல் தலைமையுமான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் முஸ்லிம்களுடைய உரிமைகள் விடயம், கல்முனைக்கான எல்லை நிர்ணையம் சம்பந்தமான பேசி தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள், கரையோர மாவட்ட கோரிக்கை, வாழைச்சேனைகக்ன தனியான பிரதேச சபை போன்ற விடயங்களில் தலைமை ரவூப் ஹக்கீம் உரிய நேரத்தில் சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க தவறுகின்றார் என்பதில் காலத்துக்கு காலம் முரண்பட்டு வரக்கூடியவராக இருந்து வருகின்றார்.

இந்த நிலையில் தனது தலைமை அமைச்சினை எடுத்தும் தனது பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்களும், கிடைக்க வேண்டிய உரிமைகலும் தேர்தலுக்கு முன்பாக வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதில் ஒரே பிடிய தலைமையை எதிர்த்து செயற்பட்டு தனக்கு வாக்கலித்த மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் முக்கிய அம்சமாக அமைச்சினை பொறுப்பெடுகாமல் இருக்கும் முக்கிய தருனத்திலேயே இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமையை ஒட்டுமொத்த கல்முனை குழுவுடன் ஹரிஸ் திடீரென சந்தித்துள்ளார்.

மேலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசல், வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியதோடு நேற்று இரவு (05) கொழும்பில் நடந்த குறித்த சந்திப்பில் கல்முனை ஜூம்ஆ பள்ளி தலைவர் டாக்டர் அஸீஸ் , வர்த்தக சங்க தலைவர் சித்தீக் ஹாஜியார், ஆகியோர்கள் உட்பட கல்முனையில் உள்ள பிரல முக்கியஸ்தர்களும், முக்கிய ஓரிரு அரசியல் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். அத்தோடு குறித்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூபும் பங்கேற்றார்.

ஹரிசுடன் சென்ற குழுவிடம் விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் ரிசாட் , கல்முனையில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் கல்முனை விவகாரத்தில் சுமூகமான தீர்வினை ஏற்படுத்துவதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த காலத்தில் காட்டிய ஈடுபாடு போன்று மேலும் பல மடங்கு இதய சுத்தியான பங்களிப்பை நல்குமெனவும் உறுதியளித்ததுடன் இவ்விடம் அம்பாறை அரசியலிலும், தேசிய அரசியலும், முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரத்திலும் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு சந்திப்பாக கூட அமையலாம் என்பதே எல்லோருடைய கருத்துமாக இருக்கின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here