அமைச்சர் மனோ கணேசன் கோடிக்கணக்கான காசுகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளைத் திருப்புவதற்காக வடக்கு கிழக்கிலே உதவி செய்கின்ற போர்வையில் செயற்படுகின்றார்

0
8

அமைச்சர் மனோ கணேசன் கோடிக்கணக்கான காசுகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளைத் திருப்புவதற்காக வடக்கு கிழக்கிலே உதவி செய்கின்ற போர்வையில் செயற்படுகின்றார் என தமிழ் தேசிய மக்கள் முன்னியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.

அண்மையில் மாவட்டத்திற்கு திடீரென மூன்று அரசியல் தலைமைகள் வந்தமை தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விக்கு இன்று புதன்கிழமை பதில் வழங்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொருத்த வரையில் நாங்கள் 2010ல் இருந்தே கிழக்கு மாகாணத்தில் எங்கள் நிலைப்பாட்டைக் கொண்டு செல்கின்றோம். மக்கள் மத்தியில் எங்கள் தெளிவுபடுத்தல்களைச் சொல்லி வருகின்றோம்.

எமது கொள்கை என்ன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நாங்கள் ஏன் வெளியேறினோம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் பாதை மாறிச் செல்லுகின்றது போன்ற விடயங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தினோம்.

எமது தலைவரின் வருகையும் அது தொடர்பாகவே இருந்து வந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, மாங்கேணி, கல்லாறு, மாங்காடு போன்ற இடங்களில் மக்கள் சந்திப்பினை மேற்கொண்டிருந்தோம்.

அதேவேளை விக்னேஸ்வரன் அவர்களும் மட்டக்களப்பிற்கு வந்து அலுவலகத்தையும் திறந்து வைத்துள்ளார். இவை இரண்டு ஒரே நாளில் இடம்பெற்றமையால் ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் பலவாறாகப் பேசப்படுகின்றது.

அத்தோடு அமைச்சர் மனோ கணேசன் கோடிக்கணக்கான காசுகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளைத் திருப்புவதற்காக வடக்கு கிழக்கிலே உதவி செய்கின்ற போர்வையில் செயற்படுகின்றார்.

குறிப்பாக அரசுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் அரசை விட்டு மாறிவிடும் என்பதற்காக அடிக்கடி இங்கு வந்து மக்களையும் ஏனைய தலைவர்களையும் திசை திருப்பும் முகமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அவரின் பிரதேசமான மலையகத்தில் அம்மக்கள் 1000 ரூபா கேட்டு கிடைப்பதற்கு வழியில்லாமல் இருக்கும் போது. அப்பிரதேசத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கத்தக்கதாக அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கில் வந்து உதவிகள் செய்வதென்பது ஒரு அரசியல் தந்திரமோ என எண்ணத் தோன்றகின்றது என்று தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here