பெற்றிக்கலோ கெம்பஸ் தொடர்பில் முறையான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்

0
3

பெற்றிக்கலோ கெம்பஸ் தொடர்பில், அதற்கு நிதி கிடைத்த விதம், காணி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் முறையான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என, ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆசு மாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவரும் பெற்றிக்கலோ கெம்பஸ் தொடர்பில்  (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பெற்றிக்கலோ கெம்பஸ் நிறுவனம் தொடர்பாக பாராளுமன்ற மேற்பார்வை குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு, இதில் மோசடிகள் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது. இக்குழுவின் அறிக்கை தனிப்பட்ட ரீதியில் நான் முன்னெடுப்பதாக ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். இதனை நான் நிராகரிக்கின்றேன். இதனை யாரும் இனவாதமாக பார்க்கக் கூடாது.

பெற்றிக்கலோ கெம்பஸ் தனியார் பல்கலைக்கு நிதி  கிடைத்த விதம் குறித்து  முறையான விசாரணைகள் அவசியமாகும். அதற்கு பணம் கிடைத்த முறையில் பாரியளவு தவறு நடந்துள்ளது. இலங்கை வங்கிக்கு பணம் வரும் போது அந்த பணம் எவ்வாறு கிடைத்தது என்று குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் குறித்த நிதி கடனாக வந்தது என்று எந்தவித பதிவும் கிடையாது. குறித்த காணிக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என அதிகாரிகளிடம் கேட்ட போது அது தொடர்பாக அனுமதிக்கான கோப்புகளோ, ஆவணங்களோ அவர்களிடம் இருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் அறிக்கைகளின் அடிப்படையில், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

#thinakaran

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here