மாற்றுத்திறனாளிகளால் வைத்தியசாலையில் சிரமதானம்

0
6

ஓட்டமாவடி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் சிரமதானமும், மரக்கன்று நடும் நிகழ்வும் நடைபெற்றது.

ஓட்டமாவடி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.ஐ.தௌபீக் (ஸஹ்வி) தலைமையில் அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் சிரமதான வேலைகளை மேற்கொண்டர்.

அத்தோடு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.முஸ்தபாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகளின் ஞாபகார்த்தமாக மரக்கன்றும் நாட்டப்பட்டது.

குறித்த நிகழ்வில் மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.முஸ்தபா கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அடுத்த கட்ட நிகழ்வாக டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டமொன்றினை ஏற்பாடு செய்ய உள்ளதாக அமைப்பின் தலைவர் எஸ்.ஐ.தௌபீக் (ஸஹ்வி) தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here