மாற்றுத்திறனாளிகள் மாவட்ட விளையாட்டு விழா

0
6

ஆரம்பகைத் தொழில் சமூகவலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டுதலில் சமூக சேவைத்திணைக்களம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மதிப்பீடு செய்யும் இவ் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் மாவட்ட விளையாட்டு விழா மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து சுமார் 500 மாற்றுத்திறனாளிகள் பங்கு கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இங்கு ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் (ஓட்ட நிகழ்வுகள், நீளம், உயரம் பாய்தல், குண்டு, பருதி வீசுதல், அஞ்சல் ஓட்டம் மற்றும் பாரம்பரிய பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இங்கு இடம்பெற்ற போட்டியில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் இருந்து 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றிய வதுறியா மாஞ்சோலையைச் சேர்ந்த அப்துல் வாஹிட் இமான் மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும், அதே 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாஞ்சோலையைச் சேர்ந்த கலந்தர் லெவ்வை இஜாஸ் என்பவர் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

அத்தோடு முதலாம் இடத்தினைப் பெற்ற அப்துல் வாஹிட் இமான என்பவர் கொழும்பில் இடம்பெற இருக்கும் மேலதிக வீராங்கனை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.த.யாழினி தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், காணிப் பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட கணக்காளர் கே.கேதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்னியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச சேவை பணியாளர்கள், மாற்றுத்திறனாளின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் திறமை காட்டியவர்களுக்கு திறமைச் சான்றிதங்கள், பரிசில்கள்; வழங்கி வைக்கப்பட்டதுடன், இப்போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்ட சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here