தமிழ் முஸ்லிம் இன நல்லுறவிற்கு தடையாக இருப்பது என்ன? பகுதி 01.. விளக்கமளிக்கின்றார் வருன்-கமலதாஸ்.!!

0
5

இந்தியாவில் செயற்படுகின்ற இந்துத்துவ கடுபோக்கு சிந்தனையாளர்களான சிவசேனா, ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி, விஷ்வ ஹிந்து பரிசத், போன்ற அமைப்புக்கள் அண்மைக்காலங்கலாக மட்டக்களப்பில் காற்பதிப்பதன் ஊடாக வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் பேசும் சமூகமான முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் அச்ச சூழ் நிலைகளுக்கும் பல இன முரண்பாடு சம்பந்தமான இன்னபிற பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வருவதான பேச்சுக்கள் மக்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளன.

அத்தோடு தமிழ் பேசும் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதலுக்கு பிற்பாடு மிகவும் பாரதூரமானை சிந்தனைகளை கிளறி விடும் வகையில் இரண்டு சமூகங்களையும் பிரித்து அரசியலில் குளிர் காய்ந்து கொள்வதற்கான சுய நலவாதிகளின் நரித்தனமான திட்டங்கள் திரை மறைவில் இடம் பெறுகின்றது என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை.

இந்த நிலையில் மீண்டும் எவ்வாறு இரு சமூகங்களுக்கு மத்தியில் தேங்காயும் பிட்டும் போல் வாழ்க்கை முறையினை இன நல்லுறவின் மூலம் தமிழ் சமூகத்தை பிரதி நித்துவப்படுத்துகின்ற இந்துத்துவ அமைபுக்கள் மூலம் முன்னெடுக்க முடியும்.?

தமிழ் பேசுகின்ற தமிழர்களும், முஸ்லிம்களும் தமிழ் பேசும் சமூகங்களாக வடகிழக்கில் மீண்டும் ஒன்றாக ஒற்றுமையுடன் சகல விடயங்களிலும் வாழ்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை இரண்டு சமூகங்களையும் பிரதி நிதித்துவபடுத்துகின்ற மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், கடும்போக்கு சிந்தனையாளர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து விட்டுக்கொடுப்புக்களுடன் முன்னெடுக்க முடியும்?

இதற்காக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன.? என்பது குறித்த விடையம் சம்பந்தமாக
இந்து சமூகத்தினை காப்பாற்றுகின்ற அல்லது இந்துத்துவ விழுமியங்களை காப்பாற்ற நினைக்கின்ற சமூக சீர்திருத்த வாதியாக தன்னை அழைத்து கொள்பவரும், இந்து மகா சபை, அகில இலங்கை இந்து மாமன்றம், விஷ்வ ஹிந்து பரிசத் எனும் உலக இந்து சம்மேளனத்தின் பிரதி நிதியும், தமிழர் ஐக்கிய முன்னணியின் செயலாளருமான வருன்-கமலதாஸ் இலங்கையில் அதிலும் முக்கியமாக வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் பேசும் சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்களினுடைய இன நல்லுறவிற்கு தடையாக இருக்கின்ற விடயங்கள் எவை.? என்பது சம்பந்தமாக முன்வைக்கின்ற முக்கியமான கருத்துக்களை முற்போக்கு சிந்தனையுடனுடம் நடு நிலை சிந்தனையாளருமாக முன் வைக்கின்றார்..

மேலும் அவருடைய கருத்துக்கள் பொதுவானதாகவும், பல கேள்விகளுக்கான விடைகளாக மிக நீண்டதாகவும் உள்ளபடியினாலும், சமகாலத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இன ரீதியான கருத்து முரண்பாடுகளை இரு சமூகங்களுக்கு மத்தியில் இருந்தும் தூக்கியெறிந்து ஒரு தாய் வீட்டு பிள்ளைகளை போன்று ஒரே மொழியை பேசும் இரு சமூகங்களும் வாழ வேண்டும் என்பதற்காக பகுதி பகுதியாக பதிவேற்றபடுகின்றது…

-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here